வட மாகாண ஆளுநர் அலுவலக பொதுமக்கள் சந்திப்பு எதிர்வரும் புதன்கிழமை(17) காலை வேளை நடைபெறாதென ஆளுநர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஆளுநரின...
வட மாகாண ஆளுநர் அலுவலக பொதுமக்கள் சந்திப்பு எதிர்வரும் புதன்கிழமை(17) காலை வேளை நடைபெறாதென ஆளுநர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஆளுநரின் ஊடக செயலாளர் அனுப்பியுள்ள செய்திக் குறிப்பிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பளைப் பகுதியில் பாடசாலை நிகழ்வில் ஆளுநர் அன்று காலை பங்கெடுக்கவுள்ளதாகவும் மதியத்தின் பின்னர் மக்கள் சந்திப்பு இடம்பெறுமெனவும் அறியத் தரப்பட்டுள்ளது.