இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நிர்வாகச் செயலாளர் எக்ஸ்.குலநாயகம் வீட்டில் நேற்று புதன்கிழமை (12)மாலை திருட்டுச் சம்பவமொன்று பதிவாகியுள்ளது. ய...
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நிர்வாகச் செயலாளர் எக்ஸ்.குலநாயகம் வீட்டில் நேற்று புதன்கிழமை (12)மாலை திருட்டுச் சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
யாழ்ப்பாணம் மார்ட்டின் வீதியில் உள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு அருகில் உள்ள வீட்டிலேயே குறித்த திருட்டு சம்பவம் பதிவானது.
வீட்டில் இருந்தவர்கள் நித்திரையில் இருந்த சமயத்தில் இரண்டு கையடக்கத் தொலைபேசிகளும் சிறிய தொகைப் பணமும் இதன்போது திருடிச் செல்லப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருட்டு சம்பவம் தொடர்பான சிசிடிவி கண்காணிப்பு கமராவின் காணொளியும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.