நைஜர் அரசாங்கத்துடனான பாதுகாப்பு மற்றும் பிற ஒத்துழைப்பை அமெரிக்கா நிறுத்தக்கூடும் என வெள்ளைமாளிகையின் ஊடகப் பேச்சாளர் ஜான் கிர்பி தெரிவித்த...
நைஜர் அரசாங்கத்துடனான பாதுகாப்பு மற்றும் பிற ஒத்துழைப்பை அமெரிக்கா நிறுத்தக்கூடும் என வெள்ளைமாளிகையின் ஊடகப் பேச்சாளர் ஜான் கிர்பி தெரிவித்துள்ளார்.
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரில் ஜனாதிபதி முகமது பாசும் தலைமையிலான ஆட்சி நடந்து வந்தது.
ஆனால் அந்த நாட்டின் இராணுவம் அவரை சிறைபிடித்து ஆட்சி கவிழ்க்கப்பட்டது.பின்னர் நைஜரில் இராணுவ ஆட்சியை கொண்டு வந்ததாக அரச தொலைக்காட்சியில் நேரலையில் அறிவித்தனர்.
இராணுவத்தின் இந்த செயலுக்கு ஐ.நா. சபை மற்றும் சர்வதேச அளவில் கண்டனங்கள் எழுந்தன.
இந்தநிலையில் இராணுவத்தின் இந்த நடவடிக்கைகள் மூலம் அங்கு ஸ்திரத்தன்மை குறைந்து பிராந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.
எனவே நைஜர் அரசாங்கத்துடனான பாதுகாப்பு மற்றும் பிற ஒத்துழைப்பை அமெரிக்கா நிறுத்தக்கூடும் என வெள்ளைமாளிகையின் ஊடகப் பேச்சாளர் ஜான் கிர்பி தெரிவித்தார்.