யாழிலிருந்து அக்கரைப்பற்று செல்லும் அரச போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸில், நேற்றிரவு கஞ்சாவை கடத்த முயன்ற ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்...
யாழிலிருந்து அக்கரைப்பற்று செல்லும் அரச போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸில், நேற்றிரவு கஞ்சாவை கடத்த முயன்ற ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது குறித்த நபரிடமிருந்து 4 கிலோ 160 கிராம் கஞ்சாப் பொதிகள் மீட்கப்பட்டுள்ளன.
குறித்த பஸ்ஸில் கஞ்சா கடத்தப்படுவதாக இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், ஆனையிறவு சோதனை சாவடியில் வைத்து பஸ்ஸை சோதனை செய்தபோது இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது கைது செய்யப்பட்ட சந்தேகநபர் முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் என அறியமுடிகிறது.