போரை நிறுத்த உலக நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகள் வேண்டுகோள் விடுத்தன. தூதரக அளவிலான பேச்சுவார்த்தை நடத்தியும் அது தோல்வியில் முடிந்தது. ...
போரை நிறுத்த உலக நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகள் வேண்டுகோள் விடுத்தன. தூதரக அளவிலான பேச்சுவார்த்தை நடத்தியும் அது தோல்வியில் முடிந்தது.
ஓராண்டை கடந்தும் போர் தீவிரமடைந்து உள்ள சூழலில், உக்ரைனின் கடல் துறைமுகங்களான ஒடிசா மற்றும் சோர்னோமோர்ஸ்க் மீது ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்களை கொண்டு ரஷ்யா தாக்கி உள்ளது என சமீபத்தில் உக்ரைன் குற்றச்சாட்டியது.
இந்த நிலையில், ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள கிரிமீயா பகுதியில் வெடிபொருள் கிடங்கு மீது உக்ரைனின் ஆளில்லா விமானம் திடீர் தாக்குதல் நடத்தியுள்ளது.
கிரிமீயாவின் மைய நகரான ஒக்தியாபிரிஸ்க் நகரில் உள்ள ரெயில் நிலையத்திற்கு சற்று தொலைவில் இருந்து கரும்புகை வான் வரை கிளம்பி சென்றது.