பஞ்ச ஈஸ்வரங்களில் ஒன்றான கீரிமலை நகுலேஸ்வரம் ஆலய பிரதம குருவும் , ஆதீன கர்த்தாவும் ஆகிய கலாநிதி ராஜ ராஜ ஸ்ரீ சிவஶ்ரீ நகுலேஸ்வரக் குருக்கள...
பஞ்ச ஈஸ்வரங்களில் ஒன்றான கீரிமலை நகுலேஸ்வரம் ஆலய பிரதம குருவும் , ஆதீன கர்த்தாவும் ஆகிய கலாநிதி ராஜ ராஜ ஸ்ரீ சிவஶ்ரீ நகுலேஸ்வரக் குருக்கள் அவர்கள் நேற்று (15.07.2023) 98 வது வயதில் இறைபதமடைந்தார்.
இவரின் இறுதிக்கிரியைகள் இன்று மாலை 1.30 மணியளவில் நடைபெற்று இறுதி ஊர்வலம் மாலை 3.00 மணிக்கு ஆரம்பமாகி கீரிமலை இந்து மயானத்தில் இவரது புனித உடல் தீயுடன் சங்கமமாகியது.
இதன்போது பொலிஸார் வானத்தை நோக்கி மூன்று தடவை துப்பாக்கி வேட்டுக்களை தீர்த்து அரசு மரியாதையை செலுத்தினர்.
1925/05/27 ம் திகதி யாழ்.நகுலேஸ்வரத்தில் குமாரசுவாமிக்குருக்கள் அன்னம்மா தம்பதிகளுக்கு மகனாக இவ்வுலகில் அவதரித்தார்.
இவர் வேதநாயகியம்மாவை மணம் முடித்து எட்டு குழந்தைகளையும் பெற்றெடுத்தார்.
1948 ஆம் ஆண்டில் இருந்து நகுலேஸ்வரர் ஆலய ஆதின கர்த்தாவாக 75 வருடங்கள் தொண்டாற்றியவர்