இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரித்தானியாவிலுள்ள பல்கலைக்கழகங்களில் கல்வி பயின்றுவரும் இலங்கையைச் சேர்ந்த மாணவர்கள் யாழ்.வரணி மத்திய கல்ல...
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரித்தானியாவிலுள்ள பல்கலைக்கழகங்களில் கல்வி பயின்றுவரும் இலங்கையைச் சேர்ந்த மாணவர்கள் யாழ்.வரணி மத்திய கல்லூரிக்கு அண்மையில் விஜயம் மேற்கொண்டு அங்கு இடம்பெற்ற பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டனர்.
பிரித்தானியாவில் பிறந்தவர்களும், சிறுவயதில் பிரித்தானியாவிற்கு சென்றவர்களுமாக 20 பேர் இந்த மாணவர் குழுவில் உள்ளடங்குகின்றனர்.
இதன்போது இந்த மாணவர் குழாத்தினரால் 6 லட்சம் ரூபா பெறுமதியான விளையாட்டு உபகாரணங்கள் பாடசாலைக்கு அன்பளிப்புச் செய்யப்பட்டன.