வடக்கில் உள்ள வைத்தியசாலைகளில் சில மருந்து பொருட்களுக்கான தட்டுப்பாடு காணப்படுவதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தி...
வடக்கில் உள்ள வைத்தியசாலைகளில் சில மருந்து பொருட்களுக்கான தட்டுப்பாடு காணப்படுவதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.
ஊடகங்களுக்கு இன்று கருத்து தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதனால் நோயாளிகள் அசௌரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர். இருப்பினும் சுகாதார அமைச்சின் மருந்து பிரிவுக்கு பொறுப்பானவர்கள் தொடர்ச்சியாக மருந்துகளை அனுப்பி கொண்டிருக்கின்றார்கள்.
சில மருந்துகளுக்கு திடீரென தட்டுப்பாடு ஏற்படுகின்றபடியால் பொதுமக்கள் அந்த மருந்தை மருந்தகங்களில் வாங்க வேண்டிய நிலை காணப்படுகின்றது என்றார்.