வேர்களை மீட்டு உரிமைகளை வென்றிட எனும் தொனிப் பொருளில் மாண்புமிகு மலையக எழுச்சி பேரணி இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. மலையக மக்கள் இலங்கைக்...
வேர்களை மீட்டு உரிமைகளை வென்றிட எனும் தொனிப் பொருளில் மாண்புமிகு மலையக எழுச்சி பேரணி இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.
மலையக மக்கள் இலங்கைக்கு வருகை தந்து 200 வருடங்கள் பூர்த்தியாகியுள்ள நிலையில் மலையக மக்களின் உரிமை மற்றும் அவர்களின் மூதாதையர் விட்டு சென்ற சுவடுகள் ஊடாக பயணிப்பதை நோக்காக கொண்டு ஆரம்பிக்கப்பட்ட தலைமன்னார் முதல் மாத்தளை வரை மாண்பு மிகு மலையகம்-200 நடைபவனிக்கு வலுச்சேர்க்கும் வகையில் இன்றைய தினம் (02) யாழ்ப்பாணத்தில் குறித்த நடைபவனி இடம்பெற்றது.
யாழ் மத்திய பேருந்து நிலையம் முன்பாக இன்று காலை ஆரம்பித்த நடைபவனி யாழ்நகர்ப் பகுதியை சுற்றி மீண்டும் பேருந்து நிலையத்தை வந்தடைந்து பேருந்து ஊடாக யாழ் நகரிலிருந்து வவுனியா நோக்கி புறப்பட்டது.