சிரியாவில் இராணுவ வீரர்கள் சென்ற பேருந்து மீது ஐஎஸ் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 23 இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். கிழக்கு ...
சிரியாவில் இராணுவ வீரர்கள் சென்ற பேருந்து மீது ஐஎஸ் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 23 இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
கிழக்கு சிரியாவில் சிரியப் படையினரை ஏற்றிச் சென்ற பேருந்து மீது, ஐஎஸ் தீவிரவாதிகள் பதுங்கியிருந்து தாக்குதல் நடத்தியதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த வருடத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ். உறுப்பினர்களால் மேற்கொள்ளப்பட்ட மிக மோசமான தாக்குதல் இதுவென வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.
இந்த தாக்குதலில் 26 சிரிய வீரர்கள் கொல்லப்பட்டதாகவும், 10 பேர் காயமடைந்ததாகவும் பிரிட்டனை தளமாகக் கொண்ட மனித உரிமைகளுக்கான சிரியாவின் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
2019 இல் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் தமது இறுதி பகுதியை இழந்த போதிலும், பரந்த சிரிய பாலைவனத்தில் மறைவிடங்களில் இருந்து தாக்குதல்களை நடத்திவருகின்றது.