வடக்கு மாகாண கல்வித் திணைக்களத்தின் ஏற்பாட்டில் மாகாண மட்டரீதியிலான உதைப்பந்தாட்ட போட்டி அண்மையில் வடமராட்சியில் ஆரம்பமாகியது. வடமராட்சியை ச...
வடக்கு மாகாண கல்வித் திணைக்களத்தின் ஏற்பாட்டில் மாகாண மட்டரீதியிலான உதைப்பந்தாட்ட போட்டி அண்மையில் வடமராட்சியில் ஆரம்பமாகியது.
வடமராட்சியை சேர்ந்த எட்டு மைதானங்களில் குறித்த போட்டிகள் இடம்பெறுகின்றது.
பெண்களுக்கான உதைபந்தாட்ட போட்டிகள் வதிரி டைமண்ட்ஸ் விளையாட்டு கழக மைதானத்திலும் வடமராட்சி போம்பர்ஸ் விளையாட்டு கழக மைதானத்திலும் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
எனினும் போம்பர்ஸ் விளையாட்டுகழக கழக மைதானத்தில் பத்து போட்டிகள் இடம்பெற்றிருந்தநிலையில் திடீரென மைதானத்திற்கு வருகை தந்த வடக்கு மாகாண கல்வித் திணைக்கள அதிகாரிகள் ஏனைய போட்டிகளை நிறுத்துமாறு பணித்திருந்தார்கள்.
எனினும் அங்கிருந்த ஆசிரியர்கள் போட்டிகளை நடத்துவதற்குரிய அனைத்து வசதிகளும் குறித்த மைதானத்தில் காணப்படுவதனால் போட்டிகளை தொடர்ந்து நடத்தலாம் நிறுத்த வேண்டிய அவசியம் இல்லை என தெரிவித்தனர்.
எனினும் ஆசிரியர்களின் கருத்துகளினை செவிமடுக்காது குறித்த போட்டிகளை நிறுத்துமாறு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
போம்பர்ஸ் விளையாட்டு கழக மைதானத்தில் 17 வயது மகளிர் பிரிவினருக்கான உதைப்பந்தாட்ட போட்டிகள் ஆரம்பாமான நிலையில் அதற்கான சகல ஏற்பாடுகளும் போம்பர்ஸ் கழகத்தினால் முன்னெடுக்கப்பட்டிருந்ததுடன் போட்டிகளில் பங்கப்பற்றும் மாணவிகள் தங்குவதற்கென மைதானத்திற்கு அருகில் உள்ள இரண்டு வீடுகள் அனைத்து வசதிகளுடன் தயார்படுத்தப்படிருந்ததாக போம்பேர்ஸ் கழகத்தினர் தெரிவிக்கின்றனர்.
எனினும் தமது கழகத்தின் வளர்ச்சியை விரும்பாத சிலரின் தவறான வழிநடத்தல் மூலம் எந்தவித முன்அறிவித்தல் இன்றி கல்வி திணைக்களம் எமது மைதானத்தில் இடம்பெறவிருந்த போட்டிகளை நிறுத்தியுள்ளது.
கடந்த காலங்களில் மாகாண ரீதியிலான போட்டிகள் எமது மைதானத்தில் இடம்பெற்ற போதும் எந்தவித விசாரணைகளையும் மேற்கொள்ளாது போட்டியை இடைநிறுத்தி இருப்பது என்பது எமது கழகத்தை இழிவுபடுத்தும் செயலாகவே நாம் பார்க்கின்றோம் என போம்பேர்ஸ் விளையாட்டு கழகத்தினர் தெரிவிக்கின்றனர்.