உலகக்கோப்பை செஸ் இறுதிப்போட்டியில் நோர்வே வீரர் மேக்னஸ் கார்ல்சனிடம் இந்தியாவின் பிரக்ஞானந்தா தோல்வியடைந்தார் உலக கோப்பை செஸ் தொடர் அஜர்பைஜா...
உலகக்கோப்பை செஸ் இறுதிப்போட்டியில் நோர்வே வீரர் மேக்னஸ் கார்ல்சனிடம் இந்தியாவின் பிரக்ஞானந்தா தோல்வியடைந்தார்
உலக கோப்பை செஸ் தொடர் அஜர்பைஜானில் உள்ள பாகு என்ற நகரில் நடைபெற்று வருகிறது.
இதன் இறுதிப் போட்டியில் பிரக்ஞானந்தா – மேக்னஸ் கார்ல்சனுடன் மோதினார். இறுதிப் போட்டியின் முதல் இரண்டு சுற்றுகள் சமனில் முடிந்தன. இதைத் தொடர்ந்து இன்று டை பிரேக்கர் சுற்று நடைபெற்றது. இதில் பிரக்ஞானந்தா வெள்ளை நிற காய்களுடன் விளையாடினார்.
மேக்னஸ் கார்ல்சன் மற்றும் பிரக்ஞானந்தா இடையிலான டை பிரேக்கர் சுற்றின் முதல் போட்டி பரபரப்பாக நடைபெற்றது. இதில் கார்ல்சன் வெற்றி பெற்றார்.