பல்கேரியாவில் ஆடவர்கள் தமக்கு ஏற்ற துணையினை இலகுவாகத் தெரிவு செய்வதற்கு ”மணமகள் சந்தை ”என்ற விநோத முறையினைப் பயன்படுத்தி வருகின்றனர். இச்...
பல்கேரியாவில் ஆடவர்கள் தமக்கு ஏற்ற துணையினை இலகுவாகத் தெரிவு செய்வதற்கு ”மணமகள் சந்தை ”என்ற விநோத முறையினைப் பயன்படுத்தி வருகின்றனர்.
இச் சந்தையானது அந்நாட்டின் அனுமதியைப்பெற்று இயங்கிவருவதாகவும் இதன்மூலம் ஆண்கள் தமக்குப் பிடித்தமான துணையினைத் தெரிவுசெய்துகொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறு இருப்பினும் இச்சந்தையானது அந்நாட்டில் உள்ள ஏழைப் பெண்களுக்காக மாத்திரமே அமைக்கப்பட்டுள்ளதாகவும், பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பங்கள், திருமண வயதில் உள்ள தமது பெண்பிள்ளைகளை இச் சந்தைக்கு அழைத்து செல்வதாகவும், அங்கு வருகைவரும் ஆண்கள் தங்களுக்கு பிடித்த பெண்களை தகுந்த விலை கொடுத்து வாங்கி தமது மனைவியாக ஏற்று வாழ்க்கை நடத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் இச்சந்தையில் விற்கப்படும் பெண்களை வீட்டிற்கு அழைத்துச் செல்வதற்கு பல நிபந்தனைகள் உள்ளன எனவும், பெண்களை வாங்கும் ஆண்கள் அப்பெண்ணின் சமூகத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும் என்பதும், மருமகள் அந்தஸ்தை ஆணின் குடும்பத்தினர் கட்டாயம் வழங்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.