வடமராட்சி செவிப்புலனற்றோர் விளையாட்டு கழக வருடாந்த விளையாட்டு விழாவிற்கு நிதி திரட்டும் முகமாக நடாத்தப்பட்ட அதிஸ்ட இலாப சீட்டிழுப்பின் வெற்ற...
வடமராட்சி செவிப்புலனற்றோர் விளையாட்டு கழக வருடாந்த விளையாட்டு விழாவிற்கு நிதி திரட்டும் முகமாக நடாத்தப்பட்ட அதிஸ்ட இலாப சீட்டிழுப்பின் வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
வடமராட்சி செவிப்புலனற்றோர் விளையாட்டு கழகத்தின் 10 ஆம் ஆண்டு நிறைவையொட்டி, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு இடையில் ஆண்களுக்கான உதைப்பந்தாட்டம் மற்றும் துடுப்பாட்ட போட்டிகளும், பெண்களுக்கான வலைப்பந்தாட்ட போட்டிகளும் எதிர்வரும் 8 ஆம் திகதி தொடக்கம் 10ஆம் திகதி வரையிலான மூன்று நாட்களும் நடைபெறவுள்ளன.
குறித்த போட்டிக்காக நிதி திரட்டும் முகமாக அதிஸ்ட லாப சீட்டிழுப்பை கழகத்தால் முன்னெடுத்து இருந்தனர். அதன் குலுக்கல் கடந்த 20ஆம் திகதி நடைபெற்றது.
அதில் , முதலாவது பரிசினை 2063 இலக்கமும், இரண்டாம் பரிசினை 1832 இலக்கமும், மூன்றாம் பரிசினை 4247 இலக்கமுடைய அதிஸ்ட இலாப சீட்டினை பெற்றவர்கள் பெற்றுள்ளனர்.
ஆறுதல் பரிசில்களாக 3005 இலக்கமும், 6144 இலக்கமும், 210 இலக்கமும், 6735 இலக்கமும், 2821 இலக்கமுடைய அதிஸ்ட இலாப சீட்டினை பெற்றவர்கள் பெற்றுள்ளனர்.
வெற்றி பெற்ற அதிஸ்டசாலிகள் எதிர்வரும் 31ஆம் திகதிக்கு முன்னர் 0742377686 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.
வெற்றியாளர்களுக்கான பரிசில்கள் எதிர்வரும் 10ஆம் திகதி மாலை 4 மணிக்கு வதிரியில் உள்ள V.O.D மண்டபத்தில் நடைபெறவுள்ளது.