சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான இன்று மன்னாரில் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உற...
சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான இன்று மன்னாரில் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் முன்னெடுக்கப்பட்ட இப்போராட்டத்தில் பொது அமைப்புக்கள்,சிவில் அமைப்புக்கள்,சட்டத்தரணிகள்,அருட்தந்தையர்கள்,உட்பட பலரும் பங்கேற்றிருந்தனர்.
மன்னார் சதோச மனித புதைகுழியில் ஆரம்பமான குறித்த போராட்டம், மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் நிறைவடைந்தது.