எல்ல, கொடுவெல பிரதேசத்தில் சுற்றிவளைப்புக்கு சென்ற இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இன்று (...
எல்ல, கொடுவெல பிரதேசத்தில் சுற்றிவளைப்புக்கு சென்ற இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இன்று (30) அதிகாலை 01.30 மணியளவில் எல்ல பொலிஸ் நிலையத்தின் ஐந்து உத்தியோகத்தர்கள் சுற்றிவளைப்புக்காகச் சென்ற போது அவர்களில் இருவர் இவ்வாறு தாக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்தவர்கள் 38 மற்றும் 29 வயதுடைய இரண்டு பொலிஸ் கான்ஸ்டபிள்கள் எனவும், அவர்கள் தற்போது பதுளை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பில் எல்ல பொலிஸாரால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், எல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சந்தேகநபர் கடற்படையில் இருந்து தப்பிச் சென்றவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், கைது செய்யப்படும் போது, சந்தேக நபரிடம் கூரிய கத்தி, கைக்குண்டு உள்ளிட்ட ஆயுதங்கள் இருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.