சுன்னாகம் மயிலிணி சைவ மகா வித்தியாலயத்தில் பாடசாலையின் விவசாயக்கழகமும், ஆரம்ப்பிரிவு மற்றும் விசேட கல்வி அலகு மாணவர்கள் இணைந்து மயிலிணி முரு...
சுன்னாகம் மயிலிணி சைவ மகா வித்தியாலயத்தில் பாடசாலையின் விவசாயக்கழகமும், ஆரம்ப்பிரிவு மற்றும் விசேட கல்வி அலகு மாணவர்கள் இணைந்து மயிலிணி முருகமூர்த்தி கோவில் முன்றலில் சிறுவர் சந்தை ஒன்று ஒழுங்குபடுத்தப்பட்டு சிறப்பாக இடம்பெற்றது.
இச்சந்தையில் வலிகாமம் வலயக் கல்வி வலய அலுவலர்கள், மக்கள் வங்கி ஊழியர்கள் உட்பட அதிகளவானவர்கள் சந்தையில் பொருட்களை வாங்கிச் சென்றதை அவதானிக்க முடிந்தது.
குறித்த பாடசாலை தேசிய ரீதியில் இடம்பெற்ற Mother Srilanka நிகழ்வில் இலங்கையின் பிரபல பாடசாலைகளை எல்லாம் பின்தள்ளி முதலாம் இடத்தைப் பெற்று வடமாகாணத்திற்கு பெருமை சேர்த்த பாடசாலையுமாகும்.
இதுமட்டுமன்றி தொழில் முனைவுடன் கூடிய பாடசாலைத் தோட்டத்தை சிறப்பாக அமைத்து பலரின் பாராட்டையும் இப்பாடசாலை பெற்றது.
இச்சந்தையில் பாடசாலை மாணவரால் உற்பத்தி செய்யப்பட்ட இயற்கை முறையில் உற்பத்தி செய்யப்பட்ட மரக்கறி வகைகளை மக்கள் தேடி வாங்கியதையும் அவதானிக்கமுடிந்தது.