தம்புத்தேகம – ஹிரியகம பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து இன்று அதிகாலை நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரி...
தம்புத்தேகம – ஹிரியகம பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்து இன்று அதிகாலை நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
லொறியொன்றும், பஸ் ஒன்றும் மோதுண்டே இந்த விபத்து நேர்ந்துள்ளது.
விபத்தில் மேலும் நால்வர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.
காயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.