மன்னாரின் தாழ்வுபாடு பகுதியில் சுமார் 30 மில்லியன் பெறுமதியான போதைப் பொருளை வைத்திருந்த குற்றச் சாட்டில் 34 வயதான நபரொருவரை நேற்றைய தினம் பொ...
மன்னாரின் தாழ்வுபாடு பகுதியில் சுமார் 30 மில்லியன் பெறுமதியான போதைப் பொருளை வைத்திருந்த குற்றச் சாட்டில் 34 வயதான நபரொருவரை நேற்றைய தினம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மன்னார் பொலிஸ் குற்றபுலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்தே இக்கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து 1 கிலோ 12 கிராம் கொக்கைன் போதைப் பொருளையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
இந்நிலையில் குறித்த நபரிடம் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் விசாரணைகளின் பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படவுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.