சார்க் ஊடக மன்றத்தின் ஏற்பாட்டில் யாழ்.மானிப்பாய் மகளிர் கல்லூரியில் “ஆரோக்கியமான எதிர்காலத்தை உருவாக்குவோம்” எனும் தொனிப்பொருளிலான கருத்தரங...
சார்க் ஊடக மன்றத்தின் ஏற்பாட்டில் யாழ்.மானிப்பாய் மகளிர் கல்லூரியில் “ஆரோக்கியமான எதிர்காலத்தை உருவாக்குவோம்” எனும் தொனிப்பொருளிலான கருத்தரங்கு நடைபெற்றுள்ளது.
கல்லூரி மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில்வளவாளர்களாக,
வைத்திய அதிகாரி Dr.K.உதயசீலன், யாழ்.பல்கலைக்கழக உளவியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் Dr.K.கஜிநந்தன் ஆகியோர் கலந்துகொண்டு கருத்துரைகளை வழங்கினர்.
நிகழ்வு,
முன்னதாக கல்லூரி முதல்வர் திருமதி சூரியராசா தொடக்க உரை நிகழ்த்தினார்.
வளவாளர்கள் கருத்துரைக்கும்போது,
தற்போதைய சூழலில் இளவயதில் இருக்கும் மாணவிகளாகிய நீங்கள், உடனடியான கனதியான முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்கவேண்டும் என்று வலியுறுத்தினர். அதேவேளை சமூகத்தில் தற்போது நிகழ்கின்ற நெறி தவறிய போக்குத் தொடர்பிலும் விழிப்பூட்டல் கருத்துக்களை முன்வைத்தனர்.
கருத்தரங்கிற்கான ஒருங்கிணைப்பினை புதுமை படைப்பகம் மேற்கொண்டிருந்தது. நிகழ்வு புதுமை படைப்பக இயக்குநர் ஊடகவியலாளர் இளங்கீரன் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வில் சார்க் ஊடக மன்றத்தின் இலங்கைப் பிரதிநிதிகள் சார்பாக ஊடகவியலாளர்கள் லியோ தர்ஷன், எம்.நியூட்டன், மனோச் சித்திரா ஆகியோர் பங்குகொண்டிருந்தனர்.