யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் இடம்பெறவுள்ள இசை நிகழ்வை முன்னிட்டு , பிக் மீ செயலி ஊடாக போக்குவரத்து சேவையை பெறுபவர்களுக்கு, கட்டணத்தில் பிக் ...
யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் இடம்பெறவுள்ள இசை நிகழ்வை முன்னிட்டு , பிக் மீ செயலி ஊடாக போக்குவரத்து சேவையை பெறுபவர்களுக்கு, கட்டணத்தில் பிக் மீ 15 வீத சலுகையை வழங்கியுள்ளது.
யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் இன்றைய தினம் சனிக்கிழமை நடைபெறவுள்ள சந்தோஸ் நாராயணனின் மாபெரும் இசை நிகழ்வான “யாழ் காணம்” இசை நிகழ்வில் அனுசரணையாளராக பிக் மீ நிறுவனமும் இணைந்துள்ளது.
அதனால் இன்றைய தினம் தமது நிறுவன “ப்ரோமோ கோர்டை” பயன்படுத்தி, தமது செயலி ஊடாக போக்குவரத்து சேவையை பெறுவர்கள் கட்டணத்தில் 15 வீத சலுகையை பெற்றுக்கொள்ள முடியும் என அறிவித்துள்ளனர்.