வறுமை கோட்டிற்கு கீழுள்ள மற்றும் நடுத்தர வருமானத்தை கொண்ட குடும்பங்களுக்காக கொழும்பில் 05 வீடமைப்பு திட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக நகர அ...
வறுமை கோட்டிற்கு கீழுள்ள மற்றும் நடுத்தர வருமானத்தை கொண்ட குடும்பங்களுக்காக கொழும்பில் 05 வீடமைப்பு திட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார்.
இந்த திட்டத்திற்காக 350 மில்லியன் டொலர் செலவிடப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நன்கொடை அடிப்படையில் சீனாவினால் இந்த திட்டம் வழங்கப்படும் என தெரிவித்த அவர், அதற்கான உறுதிமொழியை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் சீனா வழங்கியுள்ளதாகவும் கூறியுள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் இடைநிறுத்தப்பட்டுள்ள வீடமைப்பு திட்டங்கள், 2024ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் மீள ஆரம்பிக்கப்படும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார்.