கொழும்பு – பொரளை காசல் வைத்தியசாலையில் ஒரே பிரசவத்தில் ஆறு சிசுக்களை தாயொருவர் பிரசவித்துள்ளார். பிரசவித்த ஆறு சிசுக்களும் ஆண் சிசுக்கள் என ...
கொழும்பு – பொரளை காசல் வைத்தியசாலையில் ஒரே பிரசவத்தில் ஆறு சிசுக்களை தாயொருவர் பிரசவித்துள்ளார்.
பிரசவித்த ஆறு சிசுக்களும் ஆண் சிசுக்கள் என வைத்தியசாலையின் குழந்தை பிரிவிற்கு பொறுப்பான விசேட வைத்தியர் டொக்டர் L.P.C.சமன் குமார தெரிவித்துள்ளார்.
ஆறு சிசுக்களில் ஐந்து சிசுக்கள் காசல் வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும், ஒரு குழந்தை கொழும்பு சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
ராகம பிரதேசத்தைச் சேர்ந்த தாய் ஒருவரே இந்தக் சிசுக்குளை பிரசவித்துள்ளதாகவும், ஆறு சிசுக்களும் ஆரோக்கியமாக இருப்பதாகவும் வைத்தியசாலை தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.