காசா முனையில் ஒருங்கிணைந்த தாக்குதலை மேற்கொள்வதற்கான திட்டத்தை உருவாக்கியுள்ளோம் என இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமது வலைத...
காசா முனையில் ஒருங்கிணைந்த தாக்குதலை மேற்கொள்வதற்கான திட்டத்தை உருவாக்கியுள்ளோம் என இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தமது வலைதளத்தில் அந்நாட்டு இராணுவம் நேற்று தெரிவித்ததாவது:
காசா முனையில் தரை, வான் மற்றும் கடல் வழியாக ஒருங்கிணைந்த தாக்குதல் மேற்கொள்வதற்கான திட்டத்தை உருவாக்கியுள்ளோம். அந்த திட்டத்தை செயல்படுத்த தயாராகி வருகிறோம் என தெரிவித்துள்ளது.
இஸ்ரேலின் தரைவழித் தாக்குதலுக்கு அஞ்சி, காசா முனையில் உள்ள ஷிஃபா மருத்துவமனையில் சுமார் 35,000 பேர் தஞ்சமடைந்துள்ளனர்.
அந்த மருத்துவமனை தான் காசா முனையின் மிகப் பெரிய மருத்துவமனையாகும். தங்கள் வீடுகள் அழிக்கப்பட்டு, அங்கிருந்து வெளியேற வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டுள்ளதால், அந்த மருத்துவமனை தான் தங்களுக்கு பாதுகாப்பான இடம் என்று நம்பி, அங்கு மக்கள் அடைக்கலம் புகுந்துள்ளதாக அந்தப் பகுதியில் உள்ள சுகாதாரத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.