இலங்கைக்கு வருகைத் தந்து, கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ள ஷி யென் 6 கப்பலில் இன்று விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. இந்த கலந்...
இலங்கைக்கு வருகைத் தந்து, கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ள ஷி யென் 6 கப்பலில் இன்று விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த கலந்துரையாடலில் இன்று முற்பகல் 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம், சமுத்திர பல்கலைக்கழகம், நீரியல் வளங்கள் ஆய்வு அபிவிருத்தி மற்றும் முகவர் நிறுவனம் (நாரா), மற்றும் ருஹுணு பல்கலைக்கழகத்தின் பிரதிநிதிகள் இந்த கலந்துரையாடலில் கலந்துக்கொண்டிருந்தனர்.
இலங்கையின் கடல் பரப்பில் ஆய்வுகளை செய்யும் நோக்கில் வருகைத் தந்துள்ள இந்த கப்பலுக்கு இதுவரை வெளிவிவகார அமைச்சு அனுமதி வழங்கவில்லை.
இந்த நிலையில், இன்று முற்பகல் சீன அதிகாரிகள், இலங்கை அதிகாரிகளை கப்பலில் சந்தித்து கலந்துரையாடல்களை நடாத்தியுள்ளது.
கடலுக்கும், வளிமண்டலத்திற்கும் இடையிலான மாற்றங்கள் தொடர்பில் ஆய்வு செய்யும் வகையிலேயே இந்த கப்பல் வருகைத் தந்துள்ளதாக நாரா நிறுவனத்தின் பிரதான விஞ்ஞானி கணபதிபிள்ளை அருளானந்தன் தெரிவித்தார்.
கடலுக்கும், வளிமண்டலத்திற்கும் இடையிலான மாற்றங்களை ஆய்வு செய்து, காலநிலை எதிர்வு கூறலை சரியான முறையில் வெளியிடும் வகையிலான ஆய்வுகளையே இந்த கப்பல் முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கை அதிகாரிகளின் அனுமதி கிடைக்கும் எதிர்பார்ப்புடன் இந்த கப்பல் கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.