இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்துக்கு இடையே நிலவும் மோதல்கள் காரணமாக ஐரோப்பாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலை அதிகரிக்கக் கூடு...
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்துக்கு இடையே நிலவும் மோதல்கள் காரணமாக ஐரோப்பாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலை அதிகரிக்கக் கூடுமென சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன.
கப்பல் நிறுவனங்கள் தமது காப்புறுதி கட்டணத்தை உயர்த்தியுள்ளதன் காரணமாக இவ்வாறு விலை அதிகரிக்கக் கூடுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய யுத்த சூழ்நிலையில் கப்பல்கள் சுயஸ் கால்வாயில் பயணிப்பதால் அபாய காப்புறுதி கட்டணத்தை குறித்த கப்பல் நிறுவனங்கள் அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எனவே, கப்பல்களின் சரக்குக் கட்டணமும் அதிகரிக்கப்படலாம் எனவும் சந்தை தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.