யாழ்ப்பாணத்தில் இன்று காலை முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர். யாழ். பண்ணையில் அமைந்துள்ள தூர...
யாழ்ப்பாணத்தில் இன்று காலை முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர். யாழ். பண்ணையில் அமைந்துள்ள தூர இடங்களுக்கான பேருந்து நிலையத்திலிருந்து, ஆரம்பமாகிய பேரணி யாழ் நகரில் முடிவடைந்தது.
அண்மைய நாட்களில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் புதிய செயலி மூலம் முச்சக்கர வண்டி சேவையினை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இதன் காரணமாக நீண்ட காலமாக முச்சக்கர வண்டியினை தமது வாழ்வாதாரமாக கொண்டு செயற்படுபவர்பவர்கள் பெரும் பாதிப்பினை எதிர்கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இதனையடுத்தே முச்சக்கர வண்டி உரிமையாளர்களால் இன்று கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்ததுடன், தமக்கான நீதியைவேண்டி முச்சக்கரண்டிகளில் பதாதைகளும் ஒட்டப்பட்டிருந்தன.