தம்புள்ளையில் இடம்பெற்ற விபத்தில் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். பருத்தித்...
தம்புள்ளையில் இடம்பெற்ற விபத்தில் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் சமூக பொலிஸ் பிரிவில் கடமையாற்றி வந்த தம்புள்ளையைச் சேர்ந்த சாந்திமா ரணசிங்க (வயது- 24) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த நபர்
விடுமுறைக்காக நேற்று முன்தினம் வீடு சென்றிருந்த நிலையில் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளமை தெரிய வந்துள்ளது.
இவ் விபத்து சம்பவம் நேற்று (10) 11.00 மணியளவில் கலேவல தலகிரியாகம விகாரைக்கு எதிராக இடம் பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த டிப்பர் வாகனத்துடன் மோதுண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்விபத்தில் படுகாயமடைந்த பெண் பொலிஸ் உத்தியோகத்தர் தம்புள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று இரவு 8:00 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.