ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் சுஜித் பெரேரா தன் மீது தாக்குதல் நடாத்தியதாக இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்துள்ளார். பாரா...
ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் சுஜித் பெரேரா தன் மீது தாக்குதல் நடாத்தியதாக இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தின் நூலக வளாகத்தில் வைத்து இந்த தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.
இந்த சம்பவத்தை அடுத்து, பாராளுமன்ற சபை நடவடிக்கை 10 நிமிடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் இந்த தாக்குதல் தொடர்பான விடயங்களை தெளிவூட்டுவாதற்கான சந்தர்ப்பத்தை டயானா கமகேவிற்கு ஏற்படுத்தி கொடுக்கும் வகையில், பிரதமர் தினேஷ் குணவர்தனவின் கோரிக்கைக்கு அமையவே சபை இவ்வாறு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
நான் தாக்கவில்லை – சுஜித் பெரேரா
இராஜாங்க அமைச்சர் டயானா கமகே மீது தான் தாக்குதல் நடாத்தவில்லை என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் சுஜித் பெரேரா சபையில் தெரிவித்துள்ளார்.