ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்க கூட்டணியினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணி மீது பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர்தாரை பிரயோகம் மேற்கொண...
ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்க கூட்டணியினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணி மீது பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
இசுறுபாய கல்வி அமைச்சுக்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில், கல்வி அமைச்சை நோக்கி நடை பவணியாக வருகைத் தந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸார் கண்ணீர்புகை மற்றும் நீர்தாரை பிரயோகம் நடாத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து, பொரள்ளை – கொட்டாவ பிரதான வீதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.