வடக்கு கிழக்கிலிருந்து பெரும்பாலான தமிழ் மக்கள் வெளிநாடுகளுக்கு குடியேறுகின்றனர் என இலங்கை தமிழரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட தலைவர் சண்முக...
வடக்கு கிழக்கிலிருந்து பெரும்பாலான தமிழ் மக்கள் வெளிநாடுகளுக்கு குடியேறுகின்றனர் என இலங்கை தமிழரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட தலைவர் சண்முகம் குகதாசன் தெரிவித்துள்ளார்.
ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் மேலும் அவர் அறியத்தருகையில்,
“முன்னதாக திருகோணமலையில் முதலாம் இடத்தில் இருந்த தமிழ் மக்களின் எண்ணிக்கை தற்போது இரண்டாம் இடத்திற்கு வந்துள்ளது.
வடக்கு கிழக்கிலிருந்து கனடா - பிரித்தானியாவிற்கு படையெடுக்கும் தமிழ் மக்கள் | Srilanka People Immigration Towards Canada Britain
இது மூன்றாம் இடத்திற்கு செல்லும் அபாயத்திலும் இருக்கின்றது.
ஒவ்வொரு நாளும் திருகோணமலையிலிருந்து குறைந்தது 10 குடும்பங்கள் வெளிநாடுகளுக்கு சென்றுகொண்டிருக்கின்றனர்.
இவ்வாறு தமிழ் மக்கள் வெளிநாடுகளுக்கு குடியேறுவது மாவட்ட இருப்புக்கு பெரும் சவாலாக உள்ளது.” என்றார்.