இந்தியாவின் தெலங்கானா மாநில தேர்தல் பிரசாரத்தில் கலந்து கொள்ள விமானம் வழியாக பிரதமர் நரேந்திர மோடி பெங்களூரு வந்தடைந்தார். அங்கு இந்திய விமா...
இந்தியாவின் தெலங்கானா மாநில தேர்தல் பிரசாரத்தில் கலந்து கொள்ள விமானம் வழியாக பிரதமர் நரேந்திர மோடி பெங்களூரு வந்தடைந்தார்.
அங்கு இந்திய விமானப்படைக்கு போர் விமானங்களை தயாரிக்கும் எச்.ஏ.எல். நிறுவனத்தைப் பார்வையிட்ட அவர், பின்னர் தேஜஸ் போர் விமானத்தில் சிறிது தூரம் பறந்தார்.
போர் விமானிகளுக்கான உடையுடன் பறந்த புகைப்படத்தை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இந்த அனுபவம் உள்நாட்டு உற்பத்தித் திறன் மீதான தனது நம்பிக்கையை அதிகரித்ததாகவும், இந்தியாவின் திறன் குறித்து புதுப்பெருமையையும் நம்பிக்கையையும் தனக்கு அளித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.