மத போதகர் ஜெரோம் பெர்னாண்டோ இன்று காலை இலங்கையை வந்தடைந்தார். நீதிமன்ற உத்தரவின்படி 48 மணி நேரத்திற்குள் அவர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தி...
மத போதகர் ஜெரோம் பெர்னாண்டோ இன்று காலை இலங்கையை வந்தடைந்தார்.
நீதிமன்ற உத்தரவின்படி 48 மணி நேரத்திற்குள் அவர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலம் அளிக்க உள்ளார்.
இலங்கை மதபோதகர் ஜெரோம் பெர்னாண்டோ இலங்கை வந்தவுடன் அவரைக் கைது செய்ய வேண்டாம் என மேன்முறையீட்டு நீதிமன்றம் நவம்பர் 17ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு (CID) உத்தரவிட்டது.
போதகர் ஜெரோம் வந்த 48 மணி நேரத்திற்குள் சிஐடியிடம் வாக்குமூலம் அளிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜெரோம் பெர்னாண்டோ இந்த ஆண்டு மே மாதம் கூட்டமொன்றில் புத்தர், இஸ்லாம் மற்றும் இந்து மதம் குறித்து அவதூறான கருத்துக்களை வெளியிட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் இலங்கை காவல்துறையால் தேடப்பட்டார்.
அவரது கருத்துகளின் வீடியோ காட்சிகள் நாட்டில் உள்ள பௌத்த மதத்தை பின்பற்றுபவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. சலசலப்பைத் தொடர்ந்து, பாதிரியார் ஜெரோம் பெர்னாண்டோ தனது சர்ச்சைக்குரிய கருத்துக்கு மன்னிப்பு கேட்டார்.