மஸ்கெலியா, பிரவுன்ஸ்விக் தேயிலைத் தோட்டத்தில் சிறுத்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மஸ்கெலியா பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து நேற்று ...
மஸ்கெலியா, பிரவுன்ஸ்விக் தேயிலைத் தோட்டத்தில் சிறுத்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
மஸ்கெலியா பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து நேற்று (நவம்பர் 29) காலை தோட்டத்தில் சிறுத்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தனிநபரால் அமைக்கப்பட்ட வலையில் சிக்கி சிறுத்தை உயிரிழந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் மஸ்கெலியா பொலிஸார் மற்றும் பிரதேச வனவிலங்கு அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.