2024ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மீதான இரண்டாம் வாசிப்பு நாளை (14) ஆரம்பிக்கப்படவுள்ளது. இதன்படி, பாராளுமன்ற அமர்வு நாளை காலை 9.30 வரை...
2024ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மீதான இரண்டாம் வாசிப்பு நாளை (14) ஆரம்பிக்கப்படவுள்ளது.
இதன்படி, பாராளுமன்ற அமர்வு நாளை காலை 9.30 வரை ஒத்தி வைக்கப்படுகின்றது.
2024 – வரவு செலவுத் திட்டம் ஒரே பார்வையில்
* கொத்மலை நீர்த்தேக்கத்திற்கு அப்பால் 600 ஏக்கர் நிலம் சர்வதேச காலநிலை மாற்ற பல்கலைக்கழகத்தை நிறுவுவதற்கு ஒதுக்கப்படும்.
*.உணவு பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில், சிறு மற்றும் நடுத்தர உணவு உற்பத்தியாளர்களுக்கான முன்னேற்றத்திற்காக 250 மில்லியன் ரூபா ஒதுக்கீடு
*. ஹம்பாந்தோட்டை, யாழ்ப்பாணம், திருகோணமலை, பிங்கிரி, கண்டி ஆகிய இடங்களை மையப்படுத்தி புதிய முதலீட்டு வலயங்கள் நிறுவப்படும்.
*.கித்துல்கல மற்றும் பின்னவல ஆகிய சுற்றுலாத்தளங்களை மேம்படுத்த திட்டம். இதற்காக 750 மில்லியன் ரூபா ஒதுக்கீடு
*.அரச சுற்றுலா விடுதிகளை மேம்படுத்தி, சுற்றுலாத்துறையை வலுப்படுத்த தீர்மானம்.
*.சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில் மாகாண சுற்றுலா அதிகார சபைகளை வலுப்படுத்த தீர்மானம்.
*.புதிய சட்டங்கள் மற்றும் காலாவதியான சட்டங்களை திருத்த நடவடிக்கை
*.புதிய காணி சட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
*.இலங்கை சுங்க சட்டத்தை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
*.இரண்டு பெரிய அரசுக்கு சொந்தமான வங்கிகளில் 20% பங்குகளை மூலோபாய முதலீட்டாளர்கள் அல்லது பொதுமக்களுக்கு விற்கும் திட்டம்
*.கடன் பெற்றுக்கொள்ளும் வரையறையை 3900 பில்லியன் ரூபாவிலிருந்து 7350 பில்லியன் ரூபா வரை 3450 பில்லியன் ரூபாவினால் அதிகரிக்க யோசனை முன்வைக்கப்படுகின்றது.
*.வங்கி சட்ட கொள்கையில் மாற்றத்தை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்.
*.2022ம் ஆண்டு 128 வீதமாக காணப்பட்ட இலங்கையின் அரச கடன், 2023ம் ஆண்டு 95 வீதம் வரை குறைக்கப்பட்டுள்ளது.
*.மேல் மாகாணத்தில் மின்சார பஸ் சேவையை ஆரம்பிப்பதற்காக 200 பஸ்களை கொள்வனவு செய்ய திட்டம்.
*.வெளிநாட்டு கடனை மறுசீரமைக்க திட்டம்.
*.இலங்கையில் இரத்தினகல் துறையை மேம்படுத்த திட்டம்.
*.ஹிங்குரங்கொடை பகுதியில் சர்வதேச விமான நிலையத்திற்கு 2 பில்லியன் ரூபா ஒதுக்கீடு.
*.திருகோணமலை நகரை அபிவிருத்த செய்ய அரசாங்கம் திட்டம்;.
*.மத்திய அதிவேக வீதி கடவத்தை முதல் மீரிகம வரை புனரமைக்க சீனாவுடன் இணைந்து செயற்பட திட்டம்.
*.அதிவேக வீதி நிர்மாணத்திற்காக நிதி ஒதுக்கீடு
*.யாழ்ப்பாணம் குடிநீர் பிரச்சினைக்கான புதிய திட்டத்தை அமுல்படுத்த திட்டம்.
*.புறக்கோட்டை, காலி, மாத்தறை, அநுராதபுரம் மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பிரதான ரயில் நிலையங்களை அபிவிருத்தி செய்ய உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களை கொண்டு வர முயற்சி
*.கண்டியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க ரயில் பஸ் போக்குவரத்து ஆரம்பம்
*.ஸ்ரீலங்கா கிரிக்கெட் :- பாடசாலை மற்றும் மாகாண மட்டத்தில் கிரிக்கெட் அபிவிருத்திக்காக 1.5 பில்லியன் நிதி ஒதுக்கீடு
*.பண்டாரவளை நகரில் பொருளாதார அபிவிருத்தி மத்திய நிலைய ஸ்தாபிப்பிற்காக 250 மில்லியன் ரூபா ஒதுக்கீடு
*.யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் நகரின் பிரதான வீதியிலுள்ள சங்குபிட்டி பாலத்தை அண்மித்துள்ள பூநகர் அபிவிருத்திக்காக நிதி ஒதுக்கீடு
*.பெண்களை ஊக்குவிக்கும் வகையிலான செயற்திட்டம்.
*.வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு, இன்றும் வீடுகளை பெற்றுக்கொள்ளாதுள்ள 2000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு
*.காணாமல் போனோருக்கான நட்டஈட்டை வழங்க திட்டம். நட்டஈட்டை மேலும் வழங்க நிதி ஒதுக்கீடு.
*.கொழும்பு நகரிலுள்ள தோட்ட மக்களுக்கு புதிய வீடுகள். தோட்ட பகுதிகளில் நிறுவனங்கள் நிர்மாணிக்கப்படும் பட்சத்தில், அந்த தோட்டத்திலுள்ள மக்களுக்கு வேறு இடங்களில் புதிய வீடுகளை நிர்மாணித்துக்கொடுக்க வேண்டும் என்பதே அரசாங்கத்தின் நிபந்தனையாகும்.
*.கடற்றொழிலாளர்களின் வருமானத்தை அதிகரிக்க தனியார் துறையுடன் இணைந்ததாக திட்டமொன்றை அறிமுகப்படுத்த திட்டம்.
*.வடக்கு கடற்றொழிலாளர்களின் கடற்றொழிலை அபிவிருத்தி செய்ய நிதி ஒதுக்கீடு.
*.கடற்றொழிலை மேம்படுத்த விசேட திட்டம். மாகாண கடற்றொழில் சபைகள் ஸ்தாபிக்கப்படவுள்ளன. அரச மற்றும் தனியார் துறை சார்ந்த ஒன்றிணைந்த வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
*.பதுளைக்கான இருதய நுரையீரல் புத்துயிர் பிரிவு.
*.ஆயுர்வேதத்திற்கான வெளிநாட்டு முதலீடுகளை பெற்றுக்கொள்ள தீர்மானம்.
*.உள்நாட்டு ஆயுர்வேத மருத்துவ சேவையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
*.மருத்துவ துறை சார்ந்தோருக்கான பதவி உயர்வுக்கான நடவடிக்கை எடுக்கப்படும்.
*.சுகாதார வழிகாட்டியொன்றை தயாரிக்க திட்டம்.
*.பாடசாலை மாணவர்களுக்கு மீண்டும் காப்புறுதி திட்டம்.
*.பல்கலைக்கழக அனுமதி கிடைக்காத மாணவர்களுக்கு மாற்று திட்டங்கள்.
*.அனைவருக்கும் ஆங்கில அறிவை பெற்றுக்கொடுக்க திட்டம். 2034ம் ஆண்டு அனைவருக்கும் ஆங்கில அறிவு திட்டத்திற்காக நிதி ஒதுக்கீடு. ஆங்கில மொழி அறிவை வழங்குவதற்காக 500 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது
*.தகவல் தொழில்நுட்ப பயிற்சியை மேம்படுத்த திட்டம். அதற்காக 750 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்படுகின்றது.
*.அரச சார்பற்ற பல்கலைக்கழகங்களின் கல்வி பயிலும் மாணவர்களுக்கு கடன் திட்டம் அறிமுகம். தொழில் வாய்ப்புக்கள் கிடைத்ததன் பின்னர் கடனை செலுத்தும் வகையில் திட்;டம் அமுல்படுத்தப்படவுள்ளது.
*.சென்னையிலுள்ள தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தை இலங்கையில் ஆரம்பிக்க திட்டம். அதற்கான இந்தியா முழுமையான ஆதரவை வழங்குகின்றது.
*.அரச பல்கலைக்கழகங்களை அபிவிருத்தி செய்ய திட்டம். பேராதனை பல்கலைக்கழகம் முதலாவதாக அபிவிருத்தி செய்யப்பட்டு, அதன் பின்னர் கொழும்பு மற்றும் களனி பல்கலைக்கழகங்கள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன. பேராதனை பல்கலைக்கழக அபிவிருத்திக்காக 500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.
*.13வது திருத்தத்திற்கு அமைய பல்கலைக்கழகங்களை ஆரம்பிக்க மாகாண சபைகளுக்கு உரிமை உள்ளது. இதன்படி, மாகாண சபைகளின் அனுமதியுடன் புதிய பல்கலைக்கழகங்களை ஆரம்பிக்க அனுமதி வழங்கப்படும். இதன்படி, எதிர்வரும் ஒரு சில ஆண்டுகளில் மூன்று மடங்காக பல்கலைக்கழகங்கள் அதிகரிக்கப்படவுள்ளன.
*.பல்கலைக்கழகத்திற்கு செல்ல அனைத்து மாணவர்களுக்கும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்தும் திட்டமொன்று உருவாக்குதல்.
*.சுத்தமான குடிநீர் வழங்க திட்டம்.
*.கல்வி திட்டத்தை முழுமையாக மாற்ற யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. கல்வி திட்டத்தை முழுமையாக மாற்ற 25 பேரை கொண்ட குழு நியமிக்கப்பட்டு, அந்த குழுவின் அறிக்கை அமைச்சவை அனுமதி வழங்கியுள்ளது.
*.கிராம வீதிகளை புனரமைக்க 10 பில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்படுகின்றது.
*.அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ள வீதிகள் மற்றும் பாலங்களை புனரமைக்க 2000 மில்லியன் ஒதுக்கீடு
*.தொடர்மாடி குடியிருப்பின் உரிமைகளை பெற்றுக்கொடுக்க நிதி ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது.
*.பெருந்தோட்ட மக்களுக்கான உதவிகளை வழங்கும் நோக்குடன், பெருந்தோட்ட பகுதிகளிலுள்ள பிரதேச செயலகங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது.
*.பெருந்தோட்ட பகுதிகளில் வாழும் மக்களுக்கு காணி உரிமை வழங்கப்படவுள்ளது. அதற்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகின்றது.
*.நகர மயமாக்கல் வீட்டுத் திட்டத்தில் குடும்பமொன்றிடமிருந்து பெற்றுக்கொள்ளும் 3000 ரூபா இனி அறவிடப்படாது. அவர்களுக்கான வீட்டுரிமை அவர்களுக்கே வழங்கப்படுகின்றது.
*.பிரித்தானியா ஆட்சி காலத்தில் கையகப்படுத்தப்பட்ட விவசாய நிலங்களை, மீண்டும் விவசாயிகளுக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனூடாக விவசாயிகளுக்கு காணி உரிமை வழங்கப்படுகின்றது.
*.சிறு மற்றும் நடுத்தர வர்த்தகத்திற்கான கடனுதவி திட்டமொன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
*.விசேட தேவையுடையோர் மற்றும் சிறுநீரக பாதிப்பாளர்களுக்கான கொடுப்பனவு 7500 ரூபா வரை அதிகரிக்கப்படுகின்றது.
*.விசேட தேவையுடையோருக்கான கொடுப்பனவு, வயோதிபருக்கான கொடுப்பனவு, கர்ப்பணி தாய்மாருக்கான கொடுப்பனவு அதிகரிப்பு
*.அரச ஊழியர்களுக்கான அனர்த்த கொடுப்பனவு ஜனவரி மாதம் முதல் வழங்கப்படவுள்ளது.
*.பொலிஸ் அதிகாரிகள் வெளி பிரதேசங்களுக்கு கடமைகளுக்கு செல்லும் போது வழங்கப்படும் தங்குமிட கொடுப்பனவு அதிகரிப்பு
*.அரச ஊழியர்களுக்காக வாழ்க்கை செலவு கொடுப்பனவை 17800 ரூபா வரை அதிகரிப்பு – 2024ம் ஆண்டு வாழ்க்கை செலவு கொடுப்பனவு 10000 ரூபாவாக அதிகரிக்கப்படுகின்றது.
* . தேர்தலை இலக்காக கொண்டு இந்த வரவு செலவுத்திட்டம் தயாரிக்கப்படவில்லை. நாட்டின் எதிர்காலத்தை இலக்காக கொண்டே இந்த வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
*.அடுத்த வருடம் ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தல் நடாத்தப்படவுள்ளது.
*.நாடு 2020ம் ஆண்டு வீழ்ச்சி அடைந்ததை போன்று, மீண்டும் வீழ்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல முடியாது.
*.நட்டமடைகின்ற அரச நிறுவனங்களின் சுமை, மக்களின் மீதே சுமத்தப்படுகின்றது.
*.நாட்டின் எதிர்காலத்தை கொள்ளையிட வேண்டாம் என கோரிக்கை விடுக்கின்றேன்.
*.நாடு முழுவதும் ஊழல், மோசடி பரவியுள்ளது. ஊழல், மோசடி தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
*.வரி செலுத்தும் முறையில் காணப்படும் பிரச்சினைகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அந்த நடைமுறைகள் 2024ம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
*.மத்திய வங்கி புதிய சட்டத்தின் மூலம் பணத்தை அச்சிடமுடியாது.
*.வரியை குறைத்தால், வேறு விதத்தில் பாதிப்பு ஏற்படும்..
*.சம்பளத்தை நினைத்தவாறு அதிகரிக்க முடியாது. அரச ஊழியர்களுக்கான சம்பளத்திற்காக 35 வீதம் செலவிடப்படுகின்றது. பணத்தை அச்சிட வேண்டும். அது சரி வராது.
*.2024ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட வாசிப்பை ஆரம்பித்தார் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க.
*.பாராளுமன்றம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது
*.பாராளுமன்ற அமர்வு ஆரம்பம்