பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்தவின் பாராளுமன்ற சேவை காலத்தை இரண்டு வாரங்களுக்கு இடைநிறுத்த சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தீர்மானித்த...
பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்தவின் பாராளுமன்ற சேவை காலத்தை இரண்டு வாரங்களுக்கு இடைநிறுத்த சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தீர்மானித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
பாராளுமன்றத்தில் நேற்று ஒழுக்கமற்ற விதத்தில் செயற்பட்டதாக தெரிவித்தே, பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்தவின் பாராளுமன்ற சேவையை இரண்டு வாரங்களுக்கு இடை நிறுத்த தீர்மானித்ததாக சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் பிரகாரம், இந்த தீர்மானத்தை எட்டியுள்ளதாகவும் அவர் கூறினார்.