இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதிநிதிகள் வரவேற்றுள்ளனர். கட்டுநாயக்க...
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதிநிதிகள் வரவேற்றுள்ளனர்.
கட்டுநாயக்க பண்டார நாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு இன்று காலை வருகைத் தந்த இந்திய நிதி அமைச்சரை, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பிரதிநிதிகள் வரவேற்றுள்ளனர்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான், இ.தொ.காவின் தலைவரும் கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான், இ.தொ.காவின் தவிசாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன் உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர்.
மலையக மக்களுக்கு அங்கீகாரத்தை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ‘நாம் 200’ நிகழ்வு கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் நாளை (02) நடைபெறவுள்ளது.
அமைச்சர் ஜீவன் தொண்டமானின் அழைப்பையேற்று இந்நிகழ்வில் இந்திய அரசின் பிரதிநிதியாகவே இந்திய நிதி அமைச்சர் பங்கேற்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.