நாட்டில் 6000 பேர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த சனத்தொகையில் 3000 பேரில் ஒருவர் எய்ட்ஸ் நோயாளராக உள்ளனர். இதனை அலட்சியப்படுத்த...
நாட்டில் 6000 பேர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த சனத்தொகையில் 3000 பேரில் ஒருவர் எய்ட்ஸ் நோயாளராக உள்ளனர். இதனை அலட்சியப்படுத்த முடியாது. பாலியல் நோய் தடுப்பு தொடர்பில் சுகாதார அமைச்சு விசேட கவனம் செலுத்த வேண்டும் என முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (30) இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் சுகாதார அமைச்சுக்கான செலவீனத் தலைப்பு மீதான விவாதத்தில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.