நாளை (டிசம்பர் 02) காலை 10.00 மணி வரை பலத்த மழை மற்றும் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தல் விடுத்துள்ளது. தென...
நாளை (டிசம்பர் 02) காலை 10.00 மணி வரை பலத்த மழை மற்றும் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தல் விடுத்துள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகி நாளை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளதாகவும், ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 03) புயலாக வலுவடையும் என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த அமைப்பு மேற்கு-வடமேற்கு திசையில் இலங்கையின் வடக்கு கடற்கரையை நெருங்கி வட தமிழக கடற்கரையை நோக்கி நகரக்கூடும்.
மேற்குறிப்பிட்ட அமைப்பின் தாக்கத்தினால் வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் மழை மற்றும் காற்றுடன் கூடிய காலநிலையை எதிர்பார்க்கலாம். மேற்குறிப்பிட்ட பகுதிகளில் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான கனமழை பெய்யக்கூடும்.
வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.