யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் கேரள கஞ்சாவுடன் இளைஞரொருவர் நேற்று வியாழக்கிழமை விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டார். கிளிந...
யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் கேரள கஞ்சாவுடன் இளைஞரொருவர் நேற்று வியாழக்கிழமை விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டார்.
சந்தேக நபரும் மீட்கப்பட்ட ஒரு கிலோ 480 கிராம் கேரள கஞ்சாவும் யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் விசேட அதிரடிப் படையினரால் கையளிக்கப்பட்டது.
சந்தேக நபரை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த யாழ்ப்பாணம் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.-