யாழ்ப்பாணம்,பதுளை, மத்துகம, காலி, அம்பலாங்கொடை, அவிசாவளை, கம்பஹா, பத்தரமுல்லை, இரத்மலானை மற்றும் கிரிபத்கொட ஆகிய பகுதிகளில் மின்சார விநியோ...
யாழ்ப்பாணம்,பதுளை, மத்துகம, காலி, அம்பலாங்கொடை, அவிசாவளை, கம்பஹா, பத்தரமுல்லை, இரத்மலானை மற்றும் கிரிபத்கொட ஆகிய பகுதிகளில் மின்சார விநியோகம் வழமைக்கு திரும்பியுள்ளது.
இலங்கை மின்சார சபை இதனை தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், ஏனைய பகுதிகளிலும் மின்சார விநியோகம் ஒன்று முதல் ஒன்றரை மணி நேரத்திற்குள் சீரமைக்கப்படும் என இலங்கை மின்சார சபை குறிப்பிட்டுள்ளது.
இன்று (09) மாலை 5.10 மணியளவில் நாடளாவிய ரீதியில் மின் விநியோகம் தடைப்பட்டது.
கொத்மலை - பியகம மின் விநியோகக் கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறினால் மின் விநியோகம் முற்றாக தடைப்பட்டதாக மின்சக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த தெரிவித்தார்.
இந்த நிலையில், மின் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள தடையினால் சில பிரதேசங்களில் நீர் விநியோகத்தில் சிக்கல் ஏற்படலாமென தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை கூறியுள்ளது.