உலக தமிழர் பேரவையின் (Global Tamil Forum) உறுப்பினர்கள் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு இன்றையதினம் விஐயம் செய்யவுள்ளனர். இதன்போது மதத்தலைவர்களை சந...
உலக தமிழர் பேரவையின் (Global Tamil Forum) உறுப்பினர்கள் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு இன்றையதினம் விஐயம் செய்யவுள்ளனர்.
இதன்போது மதத்தலைவர்களை சந்தித்து கலந்துரையாடவுள்ளதுடன் பல்வேறு இடங்களுக்கும் விஜயம் செய்யவுள்ளனர்.
உலக தமிழர் பேரவையைப் பிரதிநிதித்துவப்படுத்தி, ஐக்கிய இராச்சியத்தைச் சேர்ந்த சுரேன் சுரேந்திரன், பவான் பவகுகன், வேலுப்பிள்ளை குகனேந்திரன், அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த கலாநிதி கண்ணப்பர் முகுந்தன், பிரகாஷ் ராஜசுந்தரம், கனடாவிலிருந்து ராஜ் தவரத்னசிங்கம், அமெரிக்காவிலிருந்து கலாநிதி ஜெயராஜா ஆகியோர் குறித்த விஜயத்தில் இணையவுள்ளனர்.
சிறந்த இலங்கைக்கான சங்க அமைப்பின் தேரர்கள் குழுவினர் மற்றும் உலக தமிழர் பேரவையின் (GTF) உறுப்பினர்கள் நேற்று முன்தினம் (07) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்து இமயமலை பிரகடனத்தை கையளித்தனர்