வற் வரியை திருத்தியமைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ள நிலையில், ஜனவரி முதலாம் திகதி முதல் தொலைத்தொடர்பு சேவைகளுக்கான வரிகள் அதிகரிக்கப்படும் என...
வற் வரியை திருத்தியமைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ள நிலையில், ஜனவரி முதலாம் திகதி முதல் தொலைத்தொடர்பு சேவைகளுக்கான வரிகள் அதிகரிக்கப்படும் என தொலைபேசி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
வற் வரியை 15 வீதத்தில் இருந்து 18 வீதமாக அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்ததுடன், இதன் காரணமாக தொலைத்தொடர்பு சேவைகளுக்கான வரியும் 3 வீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளது.
இதன்படி, அழைப்புக் கட்டணம், இணையச் சேவைக் கட்டணம், கட்டணத் தொலைக்காட்சி சேவைக் கட்டணம் போன்ற அனைத்து சேவைகளுக்கான கட்டணங்களும் அதிகரிக்கப்படும் என தொலைபேசி நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
சில முற்கொடுப்பனவு அட்டைக்கான கட்டணங்கள் அதிகரிக்கப்படவில்லை மற்றும் வழங்கப்பட்ட டேட்டா அளவை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சனிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அகில இலங்கை தொடர்பாடல் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திரஜித் பெரேரா, வற் காரணமாக தமது வர்த்தகம் பாரிய அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவித்தார்.