சமூக ஊடகங்களில் பௌத்தம் தொடர்பில் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டதற்காக ‘ஸ்ரீ விஸ்வ புத்தர்’ என தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளும் இலங்கை துறவி...
சமூக ஊடகங்களில் பௌத்தம் தொடர்பில் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டதற்காக ‘ஸ்ரீ விஸ்வ புத்தர்’ என தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளும் இலங்கை துறவி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அறிக்கைகளின்படி, பிக்குவின் சமூக ஊடகப் பதிவுகள் பௌத்த மதத்திற்கு அவமரியாதையாகக் கருதப்படும் உள்ளடக்கத்தைக் கொண்டிருக்கின்றன.
குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் (CID) செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில், நேற்று மாலை கம்பஹா மாவட்டத்தின் கலகெடிஹேன பிரதேசத்தில் பிக்கு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபர் இரத்தினபுரியை சேர்ந்த 34 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அவர் இன்று கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.