VAT திருத்தச் சட்டமூலத்தின் மூன்றாவது வாசிப்பு பெரும்பான்மை வாக்குகளால் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. VAT திருத்தச் சட்டமூலத்திற...
VAT திருத்தச் சட்டமூலத்தின் மூன்றாவது வாசிப்பு பெரும்பான்மை வாக்குகளால் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
VAT திருத்தச் சட்டமூலத்திற்கு ஆதரவாக 100 வாக்குகளும் எதிராக 55 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
இதன்படி 45 மேலதிக வாக்குகளால் VAT திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றில் நிறைவேறியது.
இதற்கமைய தற்போது 15 சதவீதமாக அறவிடப்படும் VAT ஆனது எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் 18 சதவீதமாக அதிகரிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.