பிரித்தானியாவின் இளவரசி ஜனவரி, 10 – 13 வரை இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம்.. பிரித்தானிய அரச குடும்பத்தைச் சேர்ந்த மரியாதைக்குரிய ரோயல் இளவ...
பிரித்தானியாவின் இளவரசி ஜனவரி, 10 – 13 வரை
இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம்..
பிரித்தானிய அரச குடும்பத்தைச் சேர்ந்த மரியாதைக்குரிய ரோயல் இளவரசி மற்றும் வைஸ்
அட்மிரல் சேர் திமோதி லோரன்ஸ் ஆகியோர் மூன்று நாட்கள் (ஜனவரி 10 – 13) பயணமாக
இலங்கை மற்றும் ஐக்கிய இராஜ்ஜியம் ஆகிய இரு நாடுகளுக்கிடையிலான இராஜதந்திர
உறவுகளின் 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் அதனை சிறப்பிக்கும் முகமாக அரச
குடும்பத்தினரின்இந்த விஜயம் இடம்பெறவுள்ளது. ஐக்கிய இராஜ்ஜியமும் இலங்கையும் பல
வலுவான தனிப்பட்ட உறவுகளையும் பொது நலன்களையும் பகிர்ந்து கொள்வதோடு ,
பொதுநலவாய அமைப்பின் ஊடாக இவ்விரு நாடுகளும் பங்காளி நாடுகளாக திகழ்ந்து
வருகின்றன.
இலங்கைக்கு பயணமாக இருக்கும் பிரித்தானிய இளவரசி கொழும்பில ; ஜனாதிபதி ரணில்
விக்கிரமசிங்ஹவை சந்திக்கவுள்ளார். அத்துடன் வணிக அமைப்புகளையும் தொண்டு
நிறுவனங்களையும் சந்திக்கவுள்ளார். குறிப்பாக இந்த உத்தியோகபூர்வ விஜயத்தில் சேவ் த
சில ;ரன் (save the children ) அமைப்பின் இலங்கை செயற்திட்டங்களையும்
மேற்பார்வையிடவுள்ளார்.
அத்தோடு அண்மையில் கொமன்வெல்த் வோர் கிரேவ்ஸ் (பொதுநலவாய போர் கல்லறைகள்)
அமைப்பின் தலைவராக இளவரசி பதவியேற்றுள்ள நிலையில் அதற்கமைவாக இலங்கையில்
உள்ள பொதுநலவாய போர் கல்லறைகளையும் பார்வையிடவுள ;ளார்.
இந்த மூன்று நாட்கள ; உத்தியோகபூர்வ விஜயத்தில் பிரித்தானிய இளவரசி அவர்கள் கண்டி மற்றும்
கொழும்பில் உள்ள மத ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த தலங்களுக்கு செல்லவுள்ளதோடு, தனது
பயணத்தில் அப்பிரதேச சமூகங்கள் மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகளுடன் சந்திப்புகளை
மேற்கொள்ளவுள்ளார். அத்துடன் இந்த பயணம் 2024 ஆம் ஆண்டு அரச குடும்பத்தின் முதல்
வெளிநாட்டுப் பயணமாக அமையுமென்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இதற்கு முன்பதாக 1995 மார்ச் மாதம், save the children அமைப்பின்
புரவலராக இளவரசியார் இலங்கைக்கு விஜயம் செய்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.