விஜய் டிவியில் 100 நாட்களில் தாண்டி வெற்றிகரமாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியின் இறுதிப்போட்டியின் பிரமாண்டம...
விஜய் டிவியில் 100 நாட்களில் தாண்டி வெற்றிகரமாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியின் இறுதிப்போட்டியின் பிரமாண்டமாக படப்பிடிப்பு சனிக்கிழமை (13) நடைபெற்றது.
அதில் யார் இந்த சீசனில் டைட்டில் வின்னர் என்ற தகவல்கள் இப்போது இணையத்தில் கசிந்து இருக்கிறது.
அந்த வகையில் அனைவரும் ஆர்வத்தோடு எதிர்பார்த்து இருந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி இன்றோடு முடிவடையை இருக்கிறது. 100 நாட்களை தாண்டி ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் இந்த நிகழ்ச்சியில் இறுதி நாள் நிகழ்ச்சி இன்று ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பாகும்.
அதாவது இந்த சீசனில் டைட்டில் வின்னராக அர்ச்சனா தேர்வாகி இருப்பதாகவும் அவரை தொடர்ந்து ரன்னராக மணி தேர்வாகி இருப்பதாகவும் மூன்றாவது இடத்தில் மாயா இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
அதுபோல விஷ்ணு மற்றும் தினேஷ் இருவரும் வாக்குகளின் அடிப்படையில் வெளியேற்றப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
கடந்த வாரம் முழுக்க ஏற்கனவே எலிமினேஷன் ஆகி வெளியே போன போட்டியாளர்கள் மீண்டும் வீட்டிற்குள் வந்திருந்த நிலையில் எல்லா போட்டியாளர்களும் மொத்தமாக அர்ச்சனாவை டார்கெட் செய்து அவரை அழ வைத்து கொண்டிருந்தனர். அதனால் மக்கள் மத்தியில் அர்ச்சனாவுக்கு அதிகமான அனுதாப அலை ஏற்பட்டிருக்கிறது.
ஏற்கனவே அரச்சனாவுக்கு சின்னத்திரை மக்களின் மத்தியில் பிரபலம் இருக்கும் நிலையில் அவரை இன்ஸ்டாகிராமில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்கள் பாலோ பண்ணி வருகிறார்கள். அதுபோல இப்போது பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் அவருடைய விளையாட்டுக்கு அதிகமான ரசிகர்கள் இருக்கும் நிலையில் வெற்றிபெற்றார்.