இலங்கை வந்துள்ள பிரித்தானிய இளவரசி ஆன், ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்துள்ளார் என ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்து...
இலங்கை வந்துள்ள பிரித்தானிய இளவரசி ஆன், ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்துள்ளார் என ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள பிரித்தானிய இளவரசியுடன் அவரின் கணவர் வைஸ் அட்மிரல் சேர் திமொதி லோரன்ஸூம் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இலங்கைக்கும் பிரித்தானியாவுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளின் 75 வருடங்களைக் கொண்டாடும் வகையில் இளவரசி ஆன் இன்று காலை நாட்டை வந்தடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.