வருடாந்த மதுவரி அனுமதி பத்திரக் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது. ஜனவரி மாதம் 12ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில்...
வருடாந்த மதுவரி அனுமதி பத்திரக் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.
ஜனவரி மாதம் 12ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் வருடாந்த மதுவரி அனுமதி பத்திர கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
அதன்படி, பனை சாராயம் தவிர்ந்த மதுபான உற்பத்தி நிலையங்களுக்கான அனுமதிப் பத்திரக் கட்டணம் 25 மில்லியன் ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பனை சாரய மதுபான உற்பத்தி நிலையங்களுக்கான அனுமதி கட்டணம் 5 மில்லியன் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
போத்தலில் அடைக்கப்பட்ட கள்ளு விற்பனை நிலையங்களுக்கான அனுமதிப் பத்திர கட்டணம் 10 மில்லியன் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், வினாகிரி தொழிற்சாலைக்கான அனுமதிப் பத்திரக் கட்டணம் 2.5 மில்லியன் ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் மதுவரி கட்டளைச் சட்டத்திற்கு அமைவாக மேலும் பல விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
அதற்கமைய, புதிய அனுமதி பத்திரம் கோரல், அனுமதி பத்திரம் செல்லுபடியாகும் காலத்தை நீடித்தல் மற்றும் அனுமதிப் பத்திரத்தை உரிமை மாற்றல் போன்ற சந்தர்ப்பங்களின் போது, விண்ணப்ப கோரல் கட்டணமாக 25 ஆயிரம் ரூபாவை செலுத்த வேண்டும்.
இந்தநிலையில், அனுமதி பத்திர உரிமையை மாற்றுவதற்காக 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் என்ற தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், சட்டபூர்வமாக வாரிசு அல்லாத ஒருவருக்கு மதுவரி உரிமை மாற்றப்படுமானால் 15 மில்லியன் ரூபாவை கட்டணமாக செலுத்த வேண்டும் என நிதியமைச்சு அறிவித்துள்ளது.