யாழ். காரைநகர் வியாவில் ஐயனார் ஆலயத்தில் இடம்பெறவுள்ள தேசிய நல்லிணக்க தைப்பொங்கல் விழாவில் பங்கேற்க நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ யாழ்ப்பாணத்...
யாழ். காரைநகர் வியாவில் ஐயனார் ஆலயத்தில் இடம்பெறவுள்ள தேசிய நல்லிணக்க தைப்பொங்கல் விழாவில் பங்கேற்க நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளார்.
தேசிய ஒருமைப்பாட்டு நல்லிணக்க அலுவலக இணைப்பாளர் கந்தசாமி கருணாகரனின் ஒருங்கிணைப்பில், நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் பங்குபெற்றுதலுடன் நாளை காலை 10 மணிக்கு இந்த பொங்கல் விழா இடம்பெறவுள்ளது.
குறித்த நிகழ்வு வியாவில் வாழ் மக்கள் வர்த்தக சமூகத்துடன் வெளிநாட்டு வாழ் உறவுகளும் இணைந்து சிறப்பாக இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.